வகுப்பறைக்கான தமிழ் எழுத்துருக்கள்

அவ்வை தமிழ் மையம் வழங்கும் வகுப்பறைப் பயன்பாட்டுக்கான புதிய தமிழ் எழுத்துருக்கள்.

Classroom Tamil Fonts - Dotted Fonts Lined Fonts Helping Arrow Fonts Handwritten Fonts |

Classroom Tamil Fonts

மாணவர்களுக்குக் கையெழுத்துப் பயிற்சி அளிப்பதை எளிமைப்படுத்துவதற்காக ஆங்கிலத்தில் சிறப்பு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை எழுத்துருக்களைத் தட்டச்சு செய்யும் போதே அதனுடன் இணைந்து எழுத்திடைக்கோடுகளும் தோன்றுகின்றன. தனியே புள்ளிக்கோடுகள் கொண்ட எழுத்துருக்களும் உள்ளன.

இதனால் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு பிரத்யேக கையெழுத்துப் பயிற்சித்தாள்களை உருவாக்க முடியும். ஒரு முறை தட்டச்சு செய்து, அச்சு எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்க முடியும். இதனால் ஆசிரியரின் நேரம் மிச்சப்படுவதோடு, மாணவர்களின் கையெழுத்தும் மேம்படும்.

கையெழுத்துப் பயிற்சிக்கான இத்தகைய எழுத்துருக்களைத் தவிரக் கணிதப்பயன்பாடு, சைகைமொழி, a-apple, b-ball போன்ற அகரமுதலி எழுத்துருக்களும் உள்ளன. இத்தகைய வகுப்பறைப் பயன்பாட்டிற்கான எழுத்துருக்களைத் தமிழில் உருவாக்கி தமிழ் மாணவர்கள் பயன்படச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவ்வை தமிழ் மையத்தின் சார்பாகச் சில எழுத்துருக்களைத் தற்போது உருவாக்கி வருகிறோம்.

தற்போது உருவாக்கத்தில் உள்ளவை:-

  • எழுத்தின் மேல் மாணவர்கள் எழுதிப் பழகும் விதமாக புள்ளிக்கோடு எழுத்துருக்கள். (dotted tracing fonts)
  • ஒரே சீரான அளவில் எழுதிப் பழகும் விதமாக இடைக்கோடு எழுத்துருக்கள். (lined fonts)
  • எழுதும் விதத்தைக் காட்டும் அம்புக்குறியுடன் கூடிய எழுத்துருக்கள். (helping fonts)
  • எழுத்துக்களில் வரையும் சித்திரங்களை உள்ளடக்கிய எழுத்துருக்கள் (image fonts)
  • அ-அம்மா, ஆ-ஆடு போன்ற அகர முதலி எழுத்துருக்கள். (alphabets shaped fonts)
  • மாணவர்களிம் கையெழுத்தை அப்படியே கொண்ட எழுத்துருக்கள். (handwritten fonts)

இவை தமிழ் ஒருங்குறி (Unicode) எழுத்துருக்கள். ஏற்கனவே பயன்படுத்தும் விசைப்பலகை மென்பொருளையே (NM Writer, E-Kalappai, IniyaTamil, Google Input…) இதற்கும் பயன்படுத்தலாம். வேர்டு, பவர்பாயிண்ட், இன்டிசைன், கோரல்டிரா போன்ற எந்த மென்பொருளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் தொகுப்பில் 20 எழுத்துருக்களை வடிவமைக்கத் திட்டமிட்டுள்​ளோம்.  இதன் முதல் தொகுதியில் புள்ளிக்கோடு எழுத்துருக்கள் (Dotted Tracing Fonts) மற்றும் இடைக்கோடு எழுத்துருக்கள்( Lined Fonts) உள்ளடக்கிய 4 எழுத்துருக்கள் இருக்கும்.

Classroom Tamil Fonts

Download Beta Version of Avvai Classroom Tamil Fonts

Scroll to Top