அவ்வை தமிழ் மையம் வழங்கும்
தமிழில் படைப்பெழுத்துப் பயிலரங்கம்
Creative Writing Workshop in Tamil
வழங்குபவர்:
பெருமாள் முருகன்
எழுத்தாளர் • கவிஞர் • பேராசிரியர்
உங்கள் கற்பனைக்கு எழுத்து வடிவம் கொடுக்க ஒரு சிறந்த வாய்ப்பு!
நாள்
ஞாயிறு, அக்டோபர் 11, 2026
நேரம்
பிற்பகல் 2:00 – 4:00
இடம்
Parr Library. Plano, TX
பயிலரங்கம்
பயிலரங்கத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? உங்கள் அனுபவங்களை இலக்கியமாக மாற்ற விரும்புகிறீர்களா? தமிழில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்களா?
இளம் படைப்பாளர்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் மற்றும் தமிழில் படைப்பெழுத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக அவ்வை தமிழ் மையம் இந்தச் சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகனிடமிருந்து படைப்பெழுத்தின் நுட்பங்களை அறிந்துகொள்ளவும், அவருடன் நேரடியாக உரையாடவும் இது ஓர் அரிய வாய்ப்பு.
படைப்பெழுத்தின் அடிப்படைகள்
ஒரு படைப்புக்கான கருவைத் தேர்ந்தெடுப்பது, கற்பனையை வளர்ப்பது, எண்ணங்களை எழுத்தில் வெளிப்படுத்துவது.
கதை சொல்லும் கலை
கதாபாத்திரங்கள், உரையாடல்கள், நிகழ்வுகள் மற்றும் அன்றாட அனுபவங்களைப் படைப்புகளாக மாற்றும் வழிமுறைகள்.
எழுத்தாளருடன் நேரடி உரையாடல்
படைப்பாற்றல், வாசிப்பு, மொழிநடை மற்றும் எழுத்துப் பயணம் குறித்த கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பு.
* பயிலரங்கின் உள்ளடக்கம் மாறுதலுக்கு உட்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னதாக உறுதிசெய்யப்படும்.
பெருமாள் முருகன்
தமிழ் இலக்கியத்தின் சமகாலப் படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்.
கொங்கு மண்டலத்தின் வாழ்வியல், வட்டார மொழி, மனித உறவுகள் மற்றும் சமூக அனுபவங்களைத் தனது படைப்புகளில் நுட்பமாகப் பதிவுசெய்தவர். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய வாசகர்களைச் சென்றடைந்துள்ளன.
12
நாவல்கள்
11
சிறுகதைத் தொகுப்புகள்
7
கவிதைத் தொகுப்புகள்
18
கட்டுரைத் தொகுப்புகள்
66
மொத்தப் படைப்புகள்
90+
உலகப் பதிப்புகள்
பங்கேற்பு
யார் பங்கேற்கலாம்?
இந்தப் பயிலரங்கம் தமிழில் எழுத ஆர்வமுள்ள அனைவருக்குமானது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளம் படைப்பாளர்கள், சிறுகதை அல்லது கவிதை எழுத முயற்சிப்பவர்கள், தங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் ஆகியோர் பங்கேற்கலாம்.
முன்னதாக இலக்கியப் படைப்புகளை எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழில் படைக்க வேண்டும் என்ற ஆர்வமே முக்கியம்.
நிகழ்வு
நிகழ்வு விவரங்கள்
நாள்
ஞாயிறு, அக்டோபர் 11, 2026
Sunday, October 11, 2026
நேரம்
பிற்பகல் 2:00 – 4:00
2:00 PM – 4:00 PM (Central Time)
நிகழ்ச்சி நிரல்
பரிந்துரைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்
| நேரம் | நிகழ்ச்சி |
|---|---|
| 1:30–1:35 | வரவேற்பு மற்றும் அறிமுகம் |
| 1:35–2:30> | பெருமாள் முருகனின் படைப்பெழுத்து வழிகாட்டுதல் |
| 2:30-3:15 | படைப்பெழுத்துப் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் |
| 3:15–3:25 | எழுத்தாளருடன் கேள்வி–பதில் |
| 3:25–3:30 | நன்றியுரை |
* பயிலரங்கின் நிகழ்ச்சி நிரல் மாறுதலுக்கு உட்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னதாக உறுதிசெய்யப்படும்.
உங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்குங்கள்!
அனுமதி இலவசம். குறைவான இருக்கைகள். முன்பதிவு அவசியம்.
அவ்வை தமிழ் மையம் (Avvai Tamil Center)
Disclaimer: This event is not sponsored by the Plano Public Library or the City of Plano.