அவ்வை தமிழ் மையம் நடத்தும்

6 ஆவது தமிழ் இசை விழா - 2019

தேதி: சனிக்கிழமை, மார்ச் 2, நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: Memorial High School, 12300 Frisco St, Frisco, TX 75033

நமது அவ்வை தமிழ் மையத்தின் சார்பில் 6 ஆவது தமிழ் இசை விழா, வரும் மார்ச் ௨-ம் தேதி நடை பெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பினால், கீழ்கண்ட இணைப்பில் பெப்ரவரி 2 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யவும். போட்டிகள் ஏதும் இல்லாமல், குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு மேடையாக இவ்விழா நடத்தப்படுகிறது. 5 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், இளையோர்கள் பங்கேற்கிறார்கள். பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்தும், குழுக்களிருந்தும் குழந்தைகள் கலந்து கொள்கிறார்கள். செவ்விசை (classical) அல்லது ஓரளவு செவ்விசை சார்ந்த பாரம்பரிய தமிழ்ப் பாடல்கள், பக்தி இலக்கியப் பாடல்கள், அல்லது ராகம் சார்ந்த நல்ல திரையிசைப் பாடல்களைப் பாட இருக்கிறார்கள். அனைவரும் வந்து கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், தமிழ் இசைப் பாடல்களைக் கேட்டு மகிழவும் அன்போடு அழைக்கிறோம்.

பதிவுக் கட்டணம் கிடையாது. நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணமும் இல்லை.

தமிழ்க் கல்வியோடு நமது பாரம்பரிய இசைக் கலையையும் பாடல்களையும் நமது குழந்தைகளிடம் அறிமுகம் செய்வோம்; வளர்ப்போம்!

பதிவு செய்வதற்கான விதிமுறைகள்

தனிநபர் பதிவு: 3 முதல் 4 மணித்துளிகள் வரை ஒரு நபர்க்கு வழங்கப்படும். குழுவிற்கான பதிவு:

 • அனைவருக்கும் சேர்த்து 9 முதல் 12 நிமிடங்கள் வரை. இந்த நிமிடங்கள் மொத்தமாக ஒரு இசைப்பள்ளிக்கோ, குழுவிற்கோ வழங்கப்படும்.
 • மேடையில் ஒரே நேரத்தில் ஒரு பாடலுக்கு 4 அல்லது 6 நபர்கள் இருக்க வேண்டும்.
 • ஒவ்வொரு பாடலையும் அதைப் பாட இருக்கும் குழந்தைகளின் பெயர்களையும் பதிவு செய்ய வேண்டும்..

பொதுவான விதிமுறைகள்:

 • போட்டிகள் இல்லை. பதிவுக் கட்டணம் கிடையாது.
 • வயது: பள்ளி செல்லும் குழந்தைகள், இளையோர் – 5 முதல் 17 வயது வரை
 • பாடல்கள் தமிழில் இருக்கவேண்டும்.
 • பாரம்பரிய இசைப் பாடல்கள் அல்லது நாட்டுப்புறப் பாடல்கள் ( பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்க்கவிஞர்களின் பாடல்கள், பக்திப்பாடல்கள், தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடல்கள், கருத்துள்ள நாட்டுப்புறப் பாடல்கள்)
 • செவ்விசை (Classical)அல்லது ஒரளவு செவ்விசை (Semi-classical) சார்ந்த திரை இசைப்பாடலாகவும் இருக்கலாம்.. உதாரணம்: காற்றினிலே வரும் கீதம்.., அலை பாயுதே கண்ணா….
 • பாடலின் பெயரும் இயற்றியவரின் பெயரும் பதிவு செய்யும் போது தெரிவிக்க வேண்டும்.
 • பங்கேற்பவர்கள் விருப்பப்பட்டால் பிண்ணனி இசைக கருவிகளைக் கொண்டு வரலாம்.
 • நீங்கள் தேர்வு செய்யப்பட்ட பாடல் முன்பே மற்றொரு பங்கேற்பாளரால் தேர்வு செய்யப்பட்டிருந்தால் உங்களுக்கு தெரிவிக்கப்படும். நீங்கள் வேறொரு பாடலை தேர்வு செய்ய வேண்டும்.
 • பங்குபெறுவோர், குழுப் பொறுப்பாளர்/ஆசிரியர் உட்பட அனைவரும் விழா இறுதி (பரிசு/சான்றிதழ் வழங்கும்) வரை இருந்து சிறப்பிற்க வேண்டுகிறோம்.
 • பதிவு செய்ய கடைசி நாள்: பிப்ரவரி 5, 2019

தொடர்புக்கு

தொலைபேசி: 214-901-7735 மின்னஞ்சல்: info@avvaitamil.org இணையம்: www.avvaitamil.org

Avvai Tamil Center Presents

Tamil Music Festival - 2019

Date: Saturday, March 2nd, 2019 Time: 2pm to 6pm Venue: Memorial High School, 12300 Frisco St, Frisco, TX 75033

Rules for Registration

Individual Registration:

 • Each individual performance can be up to 3-4 minutes.

Group Registration:

 • Each group or the music school’s performance can be up to 9-12 minutes in total.
 • Each song can be performed by a group of 4-6 individuals on the stage.
 • The list of songs, each song’s composer and the names of performing kids (both first and last names) of each song are to be provided during registration.

General Rules:

 • Performances are not judged. This is not a competition.
 • There is no registration fee.
 • Performing students must be of age 5-17.
 • Only Tamil songs are to be performed.
 • Songs can be of traditional music composed by Tamil poets like Bharathiyar and Bharathidhasan or devotionals or various genres of folk songs or classical or semi-classical film music.
 • Participants can arrange to bring their supporting own musical instruments if needed
 • If the song registered by you is already registered by someone before, you will be notified to change your selection.
 • All participants, group representatives/teachers are requested to grace the function staying till the award/certificate distribution.
 • Last date for registration is February 5th, 2019

CONTACT

Phone: 214-901-7735 Email: info@avvaitamil.org Web: www.avvaitamil.org

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

[/vc_column]

[/vc_col